ETV Bharat / city

ஆந்திராவின் கிருஷ்ணா நதிநீர், குழாய் மூலம் தமிழ்நாடு கொண்டுவரப்படுமா? - கிருஷ்ணா நதிநீர்

ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் 153-கிமீ கொண்ட தூரத்திற்கு குழாய் மூலம் தமிழ்நாடு கொண்டுவரப்படுமா என நீரியல் நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கிருஷ்ணா நதிநீர்
கிருஷ்ணா நதிநீர்
author img

By

Published : Aug 13, 2021, 8:46 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திக்கு ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் 153 கி.மீ கொண்ட தூரத்திற்கு குழாய் மூலம் தமிழ்நாடு கொண்டுவர ஆய்வு மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

கிருஷ்ணா நதிநீரின் பங்கு

இந்த அறிவிப்பு 2019ஆம் ஆண்டிலிருந்து வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளதால் இந்த அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுமா என்ற கேள்வி நீரியல் நிபுணர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

வட கிழக்கு பருவமழை சென்னையில் பொய்த்துப்போனால் கிருஷ்ணா நதிநீரின் பங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக வருவதால் கால்வாயின் அருகே வசித்து வரும் விவசாயிகள் தண்ணீரை இயந்திரங்கள் மூலம் உறிஞ்சுவதாக பொதுப்பணித்துறைக்கு புகார்கள் அடிக்கடி வருவது வழக்கம்.

இதனால் குழாய் மூலம் கிருஷ்ணா நதிநீரை கொண்டு வரலாம் என 2019ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. எனினும் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2020ஆம் ஆண்டு இந்த திட்டத்தை பற்றி பேசப்பட்டாலும் நடைமுறைக்கு வரவில்லை.

இது குறித்து முன்னாள் சென்னை குடிநீர் வாரியத்தின் நீரியல் நிபுணர் ஜே. பிரபாகரன் கூறுகையில், "இந்த திட்டத்தை அரசு நிறைவேற்றினால் குடிநீர் முழுமையாக வந்தடையும். மேலும், தண்ணீரை விவசாயிகள் அனுமதியின்றி எடுக்க முடியாது.

தற்போது வீராணம் ஏரியிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக குழாய் மூலம் கொண்டுவரப்படுகிறது. இதேபோல இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்," என்றார்.

குழாய் பதிக்கும் திட்டம்

மேலும், இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "குழாய் பதிக்கும் திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

முதலில் இந்த கால்வாயில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். தேவையான நிதியை ஒதிக்கியவுடன் வேலைகளை ஆரம்பிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இல்லங்களுக்கு இனிக்கும் குடிநீர்: ஒடிசாவில் சாத்தியமான கனவு தமிழ்நாட்டில் எப்போது நனவாகும்?

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.