ETV Bharat / city

செஸ் ஒலிம்பியாட் போட்டி செலவு விவரங்களை யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் - அமைச்சர் மெய்யநாதன் - சர்வதேச மகளிர் டென்னிஸ்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான செலவு விவரங்களை பொது தளத்தில் வைக்கிறோம். யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மெய்யநாதன் பதிலளித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி செலவு விவரங்களை யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்

author img

By

Published : Aug 16, 2022, 2:16 PM IST

சென்னை: சர்வதேச மகளிர் டென்னிஸ் (WTA) தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளதை அடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக இந்த டென்னிஸ் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறாததை அடுத்து, இந்த ஆண்டு தொடருக்காக என்ன மாதிரியாக தயார் செய்யப்பட்டு வருகிறது என்பது குறித்து மைதான அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரை தமிழ்நாடு அரசும், WTA-ம் இணைந்து நடத்துகிறது. செப்டம்பர் 12 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்காக மைதானத்தை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக மைதானம் செயல்பாட்டில் இல்லாத நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வீரர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

இந்த போட்டி நடத்த மொத்தம் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், உலகம் தரம் வாய்ந்த நவீன விளக்குகள் 3 கோடியில் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த போட்டி நடத்த முதற்கட்டமாக 1 கோடியே 50 லட்சம் முதல்வர் விடுவித்து இருக்கிறார் என்றும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக விளையாட்டுத்துறை சரிவர செயல்படாத நிலையில், தற்போது விளையாட்டுத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

அடுத்த 15 நாட்களுக்குள் மைதான வேலைகள் முடிக்கப்படும் என்று கூறிய அமைச்சர், செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் இந்த மைதானத்தில் வீரர்கள் விளையாடலாம் என்று கூறினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஊழல் நடைபெற்று இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அதிமுக ஆட்சியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து இருந்தால் 500 கோடி செலவு காட்டி இருப்பார்கள் எனவும், 114 கோடியில் இந்த போட்டியை தமிழக முதலவர் ஸ்டாலின் நடத்தி முடித்து உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான செலவு விவரங்களை பொது தளத்தில் வைக்கிறோம், யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மதிப்பை வெளியிட தயாரா... அமைச்சர் மா சுப்பிரமணியன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.