ETV Bharat / city

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை தமிழ் மொழியில் வெளியிட வாய்ப்புள்ளதா? - உயர் நீதிமன்றம் கேள்வி! - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு

ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடாமல், அது குறித்த கருத்துகள், ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்று மீனவர் நல சங்கம் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரைவை தமிழ் மொழியில் வெளியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

EIA DRAFT in vernacular language
Any possible to publish EIA DRAFT in vernacular language
author img

By

Published : Aug 7, 2020, 1:52 PM IST

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழ் மொழியில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? எனப் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கே.ஆர். செல்வராஜ் குமார் என்பவர் மீனவர் நல சங்கம் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடாமல், அது குறித்த கருத்துக்கள், ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும்; அதுவரை வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 அறிவிப்பை நிறுத்தி வைக்கக் கோரும் சூழலியல் மாணவர்கள்!

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 7) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம், செப்டம்பர் 7ஆம் தேதி வரை தடை விதித்துள்ளதால், இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

கர்நாடகா உயர் நீதிமன்றம் தடையை நீக்கக்கூடும் என்பதால், வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வரைவு அறிக்கையின் மேல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், கர்நாடகா உயர் நீதிமன்றம் தடையை நீக்கினால், நீதிமன்றத்தை அணுகலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

புதிய இ.ஐ.ஏ வரைவு மக்களின் குரலுக்கு மதிப்பளித்துள்ளது - சுற்றுச்சூழல் அமைச்சர் பதில்

மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிட முடியுமா? என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளரையும் எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.