ETV Bharat / city

'அவங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா' - தயாரிப்பாளர் ஆதம் பாவா - ஆன்டி இந்தியன் திரைப்பட இயக்குநர் ப்ளூ சட்டை மாறன்

'அவங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா' என பாஜகவினரை ஆன்டி இந்தியன் தயாரிப்பாளர் ஆதம் பாவா கேள்வி எழுப்பியுள்ளார்.

தயாரிப்பாளர் ஆதம் பாவா
தயாரிப்பாளர் ஆதம் பாவா
author img

By

Published : Dec 13, 2021, 9:37 PM IST

சென்னை: ஆன்டி இந்தியன் திரைப்பட இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் மற்றும் தயாரிப்பாளர் ஆதம்பாவா சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் ஆதம் பாவா, ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியிடப்பட்ட, ஆன்டி இந்தியன் திரைப்படத்தை, தான் தயாரித்து கடந்த 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 250 திரையரங்குகளில் வெளியிட்டதாகக் கூறினார்.

மேலும் ஆன்டி இந்தியன் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு அனுமதிக்காதநிலையில், பிரச்னையை உயர் நீதிமன்றம் வரை கொண்டு சென்று, பல தடைகளைத் தாண்டி, இப்படத்தை வெளியிட்டதாகத் தெரிவித்தார்.

தற்பொழுது ஆன்டி இந்தியன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்றிரவு(டிச.12) தேனி மாவட்டம், பெரியகுளம் பார்வதி திரையரங்கிற்கு வந்த, பாஜக நகரச் செயலாளர் ராஜபாண்டி, அவரது ஆடியாட்கள், திரைப்படத்தை திரையிடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த பெரியகுளம் காவல் துறையினர் பேனர்களை அகற்றி, திரையரங்கு உரிமையாளரிடம் படத்தை திரையிடக்கூடாது என மிரட்டல் விடுத்ததாகத்தெரிகிறது.

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேட்டி

இது குறித்து காவல் துறைக்கு ஆன்லைன் மூலமாகப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய அவர், யூ-ட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லையா என கேள்வி எழுப்பும் பாஜகவினர், தங்களது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் செயல்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அவர்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் மதவாதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், ஆதம் பாவா வேதனைத் தெரிவித்தனர்.

மேலும் ஆன்டி இந்தியன் திரைப்படத்தை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர் மற்றும் படக்குழுவினருக்குத் தொடர்ந்து, கொலை மிரட்டல்கள் வருவதால், உடனடியாக தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயில் சீரமைப்பு அனுமதி விவகாரம்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.