தமிழ்நாடு முழுவதும் மது எதிர்ப்பு இயக்க போராட்டத்தை நடத்தி வருபவர் நந்தினி ஆனந்தன். இவர் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”தமிழ்நாட்டை நாசமாக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி தொடர்ச்சியாக நாங்கள் போராடி வருகிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என திமுக வாக்குறுதி அளித்தது.
இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவை பின்பற்றி, டாஸ்மாக்கை திறந்து லட்சக்கணக்கான தமிழர்களின் குடும்பங்களை நாசப்படுத்தி வருகிறது.
இதனைக் கண்டித்தும், உடனடியாக அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரியும் வருகிற ஜூன் 23ஆம் தேதி, சென்னையில் உங்களது வீட்டின் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வீடு தேடிவந்த தமிழிசை: பரிசு கொடுத்த ஸ்டாலின்