ETV Bharat / city

சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம், சந்தோஷம் மட்டுமே! - பிர்லா கோளரங்கம்

சென்னை: வரும் 26ஆம் தேதி நிகழவுள்ள சூரிய கிரகணத்தை வெறும் கண்களாலோ, தொலைநோக்கியிலோ பார்க்கக்கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

eclipse
eclipse
author img

By

Published : Dec 21, 2019, 6:26 PM IST

சூரிய கிரகணம் வரும் 26ஆம் தேதி நிகழவுள்ளது. இது குறித்து பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சவுந்தரராஜப் பெருமாள், மூத்த அறிவியலாளர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, ”இம்மாதம் 26ஆம் தேதி வளைய சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் நிகழ உள்ளது. கோவை, ஊட்டி, திருச்சி, புதுக்கோட்டை முதலிய இடங்களில் காலை 9:30 மணிக்கு சூரியனின் நடுவில் பொட்டு வைத்தது போல் நிலவு கருமையாகவும், சூரியனின் விளிம்புப் பகுதி நெருப்பு வளையம் போலவும் காட்சி தரும். இந்த வளைய சூரிய கிரகணத்தை கங்கண சூரிய கிரகணம் எனவும் அழைப்பார்கள்.

பொதுமக்கள் இந்த அபூர்வ நிகழ்வை வெறும் கண்களாலோ, தொலைநோக்கி அல்லது எக்ஸ்ரே சீட்டுகளை கொண்டோ பார்க்கக் கூடாது. சிறப்புக் கண்ணாடிகளை அணிந்து மட்டுமே பார்க்க வேண்டும். வெறும் கண்களால் பார்த்தால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களாலோ, தொலைநோக்கியிலோ பார்க்கக்கூடாது

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பாக மதுரை, ஈரோடு, திருச்சி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் இக்கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு வரும் பார்வையாளர்களுக்கு ’கண் காவலன்’ என்னும் சிறப்புக் கண்ணாடிகள் வழங்கப்படும்.

கிரகணத்தின்போது சூரியனின் விளிம்புப் பகுதி நெருப்பு வளையம் போல் காட்சி தரும்

கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று ’Annular solar eclipse’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கிரகணம் பற்றியத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் “ என்றனர்.

மேலும், சூரிய கிரகணத்தின்போது எந்த ஒரு பேரிடரும் ஏற்படாது எனச் சொன்ன அவர்கள், உணவு கெட்டுப்போகும் என்பதோ வெளியில் நடமாடக் கூடாது போன்றவையோ மூடநம்பிக்கைகள் என்றும் விளக்கினர். அதுமட்டுமல்லாமல் சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம், சந்தோஷம் மட்டுமே என்றனர்.

சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம், சந்தோஷம் மட்டுமே - அறிவியலாளர்கள்

இதையும் படிங்க: 'திருப்பூரில் சூரிய கிரகணத்தை 25 ஆயிரம் பேர் பார்க்கக்கூடிய வசதி' - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Intro:Body: சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடு

சூரிய கிரகணம் வரும் 26ம் தேதி நிகழவுள்ளது. இது குறித்து பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் அதன் செயல் இயக்குனர் செளந்தரராஜ பெருமாள் மற்றும் மத்திய
முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கோவை ஊட்டி திருச்சி புதுக்கோட்டை முதலிய இடங்களில் காலை 9:30க்கு சூரியனின் நடுவில் பொட்டு வைத்தது போல் நிலவு கருமையாக சூரியனின் மையத்தை மறைத்துக்கொள்ள விளிம்புப் பகுதி நெருப்பு வளையம் போல காட்சி தரும்.

சுமார் 2 நிமிடம் வரை நெருப்பு வளைய வடிவத்தில் சூரியன் காட்சிதரும். இந்த வளைய சூரிய கிரகணத்தை கங்கண சூரிய கிரகணம் எனவும் அழைப்பார்கள்.

இந்த அபூர்வ நிகழ்வை பொதுமக்கள் சாதாரணக் கண்களால் பார்க்கக் கூடாது தொலைநோக்கி அல்லது மற்ற எக்ஸ்ரே சீட்டுகளை கொண்டும் பார்க்கக்கூடாது. சிறப்பு கண்ணாடிகளை அணிந்து மட்டுமே பார்க்கலாம். வெறும் கண்களால் பார்த்தால் கண்களில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பாக அவிநாசி, மதுரை, ஈரோடு, திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், சென்னை, சிவகங்கை உள்ளிட்ட 11 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கண் காவலன் என்னும் சிறப்பு கண்ணாடிகளும் வழங்கப்படும்.

கிரகண நாளில் எந்த பேரிடரும் ஏற்படாது. உணவு கெட்டு போவது, வெளியில் செல்லக் கூடாது உள்ளிட்ட செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று Annular solar eclipse என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கிரகணம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.