சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும், நடப்பு பருவத் தேர்வுகள் இணையம் மூலம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடப்பு பருவ தேர்வு இணையம் வாயிலாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக உரிய அனுமதி வந்தவுடன் அறிவிப்பு வெளியாகும். செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற இறுதி பருவத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் அரியர் தேர்வாக எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.