ETV Bharat / city

'அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டில் எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும்' - ஏஐபிசிஇயு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் போது, தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர் சங்கத்தின் (AIPCEU) குற்றச்சாட்டுகளுக்கும் செவி சாய்க்க வேண்டும் என, ஒரு நபர் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Nov 13, 2020, 5:49 PM IST

ஏஐபிசிஇயு
ஏஐபிசிஇயு

இது தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர் கார்த்திக் கூறும்போது, "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது, 89 கல்லூரிகள் தரமற்றது என்று அறிவித்து விட்டு அவற்றின் பெயர்களை இதுவரை வெளியிடாதது, நூறு கோடி ரூபாய்க்கு மேல் தேர்வு கட்டணம் வசூலித்து விட்டு வெறும் இரண்டு கோடி ரூபாய்க்கு டெண்டர் வெளியிட்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்திய பிறகு அந்த ஆண்டு தேர்வு நடத்தவில்லை என்று மத்திய அரசுக்கு தவறான தகவல் கொடுத்தது,

ஏஐபிசிஇயு

சமூக பொருளாதார அடிப்படையில் கரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட அரியர் தேர்ச்சி இதுவரையில் அந்த மாணவர்களுக்கு வழங்காமல் சதி செய்வது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், AIPCEU ஆசிரியர் கூட்டமைப்பின் புகார்களையும், தமிழ்நாடு அரசின் ஒரு நபர் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.