ETV Bharat / city

கல்லூரி மாணவர்களின் தேர்வுகளுக்கான வழிமுறைகள்- அண்ணா பல்கலைக்கழகம்! - தேர்வுக்குப் பயன்படுத்தும் எழுது பொருட்கள்

ஆன்லைன் தேர்வுகளின் போது, தேர்வெழுத உள்ள கல்லூரி மாணவர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
author img

By

Published : Feb 6, 2022, 1:32 PM IST

Updated : Feb 6, 2022, 2:00 PM IST

சென்னை : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாணவர்களின் பதிவு எண், மாணவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மற்றும் தேர்வு எழுத மாணவர்கள் பதிவு செய்த பாடங்களின் விவரங்கள் ( வழக்கமான மற்றும் நிலுவையில் உள்ள பாடங்கள் ) போன்ற விவரங்கள் அனைத்துக் கல்லூரிகளுக்கும் வழங்கப் பட்டுள்ளன.

மாணவர்கள் இறுதியாகப் படித்த படித்துக்கொண்டிருக்கின்ற கல்லூரிகளில், கூகுள் வகுப்பறைகள் / மைக்ரோசாப்ட் குழுக்கள் / மின்னஞ்சல் மூலமாக வினாத்தாளைப் பெறவும் மற்றும் விடைத்தாளின் மென் நகலைப் பதிவேற்றவும் ஏதேனுமொரு தளங்களில் வசதியை உருவாக்குமாறு கல்லூரி முதல்வர்களிடம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

வினாத்தாள் பெற ஏற்பாடு
மூடப்பட்ட கல்லூரிகள் / தன்னாட்சிக் கல்லூரிகள் அல்லது நிலுவை பாடங்களைக் கொண்ட மாணவர்களை மட்டுமே கொண்ட கல்லூரிகளுக்கு, மைய மாற்றம் செய்யப்பட்டு, அத்தகைய மாணவர்களுக்கு , புதிதாக ஒதுக்கப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் கூகுள் வகுப்பறைகள் / மைக்ரோசாப்ட் போன்ற தளங்களின் வழியாக வினாத்தாளைப் பெற வசதியை ஏற்படுத்தித் தருவார்கள்.
வினாத்தாளின் மென் நகலையும், அசல் விடைத்தாளையும் புதிய மையத்தின் முதல்வருக்கு அனுப்ப வேண்டும். எனவே, அனைத்து மாணவர்களும் கல்லூரிகளின் முதல்வர்களிடமிருந்து எந்த முறையில் வினாத்தாளைப் பெற வேண்டும் எனவும் மற்றும் விடைத்தாளின் மென் நகலின் பதிவேற்றத்திற்கு தேவையான விவரங்களை முன்கூட்டியே பெறுவார்கள்.

மாணவர்கள் விவரம் கிடைக்காவிட்டால் , கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் . ஒவ்வொரு கல்லூரியிலும் தொடர்பு கொள்ளவேண்டிய நபர்களின் விவரங்களைப்பெற , சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் தரவுதளத்தின் மூலம் மாணவர் உள்நுழைவு வழியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பொதுவான வழிமுறைகள்
இந்த அறிவுறுத்தல்கள், நீங்கள் எழுதப்போகும் தேர்வின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் தொடர்புடைய பொருள்களைப் பற்றிய முக்கியமான வழிமுறைகள் உள்ளன.

நுழைவுச் சீட்டு
மாணவர்கள் தேர்வெழுத தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கப்படும். இந்தத்தேர்வு நுழைவுச்சீட்டை தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலக வலைத்தளத்திலிருந்து கீழிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகைய தேர்வு நுழைவுச்சீட்டு பல்கலைக்கழகத்தால் அவ்வப்பொழுது வெளியிடப்படும் வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி அமையும்.
மாணவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டில் காணப்படும் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவில்லையெனில் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். எல்லாத்தேர்வுகளையும் மாணவர்கள் அவர்கள் தங்கும் இடத்திலிருந்து எழுத வேண்டும்.

தேர்வு நுழைவுச் சீட்டில் மாணவர்களின் பெயரிலோ, அவர்கள் எழுதும் பாடங்களிலோ தவறு இருக்குமாயின் அதனை உடனடியாகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். தேர்வு எழுதும் முன் மாணவர்கள் தாங்கள் எழுதப்போகும் பாடத்திற்கான கேள்வித்தாளை பெற்றிருக்கிறோமா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தவறான எழுதினால் நிராகரிப்பு

அவர்கள் கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டிருக்கும் பாடத்திற்கான குறியீடு மற்றும் வரன்முறைகள் சரியாகக் குறியிடப்பட்டுள்ளதா எனவும் பார்த்துக் கொள்ளவேண்டும் . மாணவர்கள் விடைத்தாளில் எந்தப்பக்கத்தையும் வெறுமனே இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் . அவ்வாறு இருப்பின் அவற்றை எழுதுகோலால் அடித்திருக்க வேண்டும் மாணவர்கள் விடைகளைத் தெளிவாக நீலம் / கருப்பு மையிலான எழுதுகோல் அல்லது நீலம் / கருப்பு மையிலான பந்துமுனை எழுதுகோலைப் பயன்படுத்தி எழுத வேண்டும் . விடைத்தாளில் பதிவு எண் , பாடக்குறியீட்டு எண் , இவற்றைத் தவறாக எழுதினால் அந்த விடைத் தாள்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
அதே போல் தேர்வுக்குத் தொடர்பற்ற ஏதேனும் தனிக்குறி , அல்லது எழுத்துகளை விடைத்தாளில் ஏதேனும் பக்கங்களில் எழுதியிருந்தால் அதுவும் முற்றிலும் நிராகரிக்கப்படும் . . மாணவர்கள் தேர்வு எழுதும் பொழுது பல்கலைக்கழகம் நுழைவுச் சீட்டை சோதிக்க விரும்பினால் அதனை வழங்கவேண்டும்.
தேர்வு முறை
வீட்டிலிருந்து எழுதும் இந்தத் தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். தேர்வுக்கான கேள்வித்தாள்கள் முன்பு போல (கரோனா காலத்திற்கு முன்பு ) அமையும்.
பயன்பாட்டிற்குரிய கருவிகள்

தேர்வு எழுதும் மாணவர்கள் மடிக்கணினி / மேசைக்கணினி / கைபேசி / வரை பட்டிகை இவற்றோடு தயார் நிலையில் இருக்க வேண்டும் . இணையதளத்தின் மூலம் தங்களுக்கான கேள்வித் தாள்களை ( தேர்விற்கு முன்னால் ) கீழிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . தேர்வு எழுதிய பின் தேர்வெழுதிய தாள்களைப் படமெடுத்து ( கையடக்க ஆவண வடிவில் ) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வுக்குப் பயன்படுத்தும் எழுது பொருள்கள்
மாணவர்கள் தங்களுக்குத் தேவையான துணியால் இழையப்பட்ட உறை ( A4 அளவில் ஏற்கத்தக்க ) நீலம் / கறுப்பு கொண்ட எழுதுகோல் , கரிக்கோல் , அழிப்பான் , கூர்மையாக்கி , அளவுகோல் , நூல் , கோடில்லா வெற்று A4 வெள்ளைத்தாள் , வரைப்படத்தாள் , விளக்கப்படம் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்க வேண்டும் . கணக்கிடும் கருவி மற்றும் ஏனைய கருவிகள் பொறியியல் படங்கள் வரைவதற்கும் , ஓவிய அடிப்படையிலான தேர்வுகள் எழுதுவதற்கும் தேவையான கருவிகள் , இணைப்புகளின் அச்சு நகல்கள் , ஏனைய தேவையான எழுதுபொருள்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பே தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் .
தேர்வெழுத கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

மாணவர்கள் தாங்கள் தங்கும் இடத்திலிருந்தே தேர்வு எழுத தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்குரிய எழுது பொருள்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்து.

Last Updated : Feb 6, 2022, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.