இறுதியாண்டு தவிர்த்து கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரியர் மாணவர்கள் தேர்ச்சிசெய்யப்பட்டனர்.
ஆனால், அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது எனப் பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் குழு எதிர்ப்புத் தெரிவித்தன. இதன் காரணமாக அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், அரியர் மாணவர்களுக்குத் தேர்வு ரத்துசெய்யப்பட மாட்டாது என்றும், தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. தற்போது முதற்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து தனியார் கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கக்கூடிய மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சசிகலா பிப். 8இல் தமிழ்நாடு வருகை: இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை