சென்னையில் சற்று குறைந்திருந்த கரோனா பரவல், கடந்த ஒரு வாரமாகவே மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
கோடம்பாக்கத்தில் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், தற்போது அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது. தொற்று அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் 91%ஆக இருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7%ஆக உள்ளது.
இதுவரை சென்னையில் மொத்தமாக ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 025 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 771 பேர் குணமாகியுள்ளனர். எஞ்சியுள்ள 12 ஆயிரத்து 13 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 241 பேர் இத்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
சென்னையில் மண்டலவாரியான பாதிக்கப்பட்டோர் பட்டியல்,
கோடம்பாக்கம் - 19,091 பேர்
அண்ணா நகர் - 18,902 பேர்
தேனாம்பேட்டை - 16,217 பேர்
ராயபுரம் - 16,010 பேர்
தண்டையார்பேட்டை -13,781 பேர்
திரு.வி.க. நகர் - 13,054 பேர்
அடையாறு - 13,271 பேர்
வளசரவாக்கம் - 11,048 பேர்
அம்பத்தூர் - 11,967 பேர்
திருவொற்றியூர் - 5,223 பேர்
மாதவரம் - 6,145 பேர்
ஆலந்தூர் - 6,912 பேர்.
சோழிங்கநல்லூர் - 4,779 பேர்
பெருங்குடி - 5,968 பேர்
மணலி - 2,672 பேர்
என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனோ - தமிழ்நாடு முழுவதும் 184 ஆர்டிபிசிஆர் ஆய்வகங்கள்