ETV Bharat / city

செல்லப்பிராணிகள் விற்பனைக்கு அனுமதி கட்டாயம் - ஆர்வலர்கள் வரவேற்பு!

சென்னை: செல்லப்பிராணிகள் மற்றும் அவை சார்ந்த பொருட்கள் விற்பனைக்கு அனுமதியை கட்டாயமாக்கியுள்ள நடவடிக்கைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

animals
animals
author img

By

Published : Jun 4, 2020, 5:42 PM IST

Updated : Jun 4, 2020, 8:18 PM IST

பெரும்பாலான வீடுகளில் காவலுக்கு மட்டுமல்லாமல் உற்றத் தோழனாகவும் வளர்ந்து வருபவை நாய்கள். இவை மட்டுமல்லாமல் பறவைகள், முயல்கள் உள்ளிட்டவையும் வீடுகளில் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இதனால் செல்லப்பிராணிகள் விற்பனை லாபம் நிறைந்த தொழிலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செல்லப்பிராணிகள் விற்பனையகங்கள் மாநில விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.

செல்லப்பிராணிகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனையகம்

வணிகத்திற்காக வரைமுறையில்லாமல், ரத்த சோதனை செய்யாமல், நிறைய குட்டிகள் போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விலையுயர் நாய்கள் இனப்பெருக்கத்திற்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்படும் நாய்க்குட்டிகள் நாளடைவில் நோய்வாய்ப்பட்டு அதன் உரிமையாளர்களாலேயே தெருவில் விடப்படக்கூடிய அவலமும் நிகழ்கிறது. இவ்வாறான நாய்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவை பெசன்ட் நகர் காப்பகத்தில் பராமரிக்கப்படுவதாகக் கூறும் விலங்குகள் நல ஆர்வலர் ஷர்வன் கிருஷ்ணன், அரசின் இந்த அறிவிப்பினால் வீட்டு விலங்குகள் காக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதரவற்ற நாய்கள் காப்பகம்
ஆதரவற்ற நாய்கள் காப்பகம்

அனுமதியை கட்டாயமாக்கியதால், சட்டத்திற்குப் புறம்பான வீட்டு விலங்கு விற்பனைகளை முழுமையாக தடுக்க முடியும். இதனால், பிராணிகள் யாரிடமிருந்து யாருக்கு விற்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும் என்றும், பண நோக்கத்தோடு செயல்படும் போலி விற்பனையாளர்கள் இதன் மூலம் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

காப்பகத்தில் பராமரிக்கப்படும் பறவை
காப்பகத்தில் பராமரிக்கப்படும் பறவை

வளர்ப்பவரையே நம்பியுள்ள நாய் உள்ளிட்ட உயிர்களை வெறும் வணிகமாக மட்டுமே பார்க்காமல், அதற்கான சுதந்திரத்தோடு, சுகாதார சூழலில் இருக்க வைப்பதே அவற்றை விற்கும், வாங்கும் உயிர்களுக்கும் அறம் சேர்க்கும்.

செல்லப்பிராணிகள் விற்பனைக்கு அனுமதி கட்டாயம் - ஆர்வலர்கள் வரவேற்பு!

இதையும் படிங்க: சிகிச்சை மையத்தில் விளையாடிய இளமானும், குட்டி குரங்கும்

Last Updated : Jun 4, 2020, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.