தமிழ்நாட்டில் 33 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிக்களுக்கு அனுமதி அளித்தல், நிதி உதவி வழங்குதல் போன்றவை ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் மூலம் நடைபெற்று வந்தன. இவ்வேளையில் பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகப் பணிகளை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பிரிந்து அதிகாரம் வழங்கப்பட்டது. இதனால் ஆங்கிலோ இந்தியன் ஆய்வாளர் பதவி நீக்கப்பட்டது.
அதன் பின்னர் அந்தப் பள்ளி செயல்படும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிகள் செயல்படும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிட நிர்ணயம், கல்விக் கட்டணம் நிர்ணயம், நியமன ஒப்புதல், பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணிகள் சரிவர மேற்கொள்ளாமல் தேக்கநிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
'உத்தரப் பிரதேசத்தில் பாலியல் குற்றவாளிக்கு 10 செருப்படி' - பஞ்சாயத்தில் தீர்ப்பு
இப்பணிகளைச் சீர் செய்வது குறித்து ஆங்கிலோ இந்திய பள்ளிகள் முதல்வர், தாளாளர், மாவட்ட கல்விக் கல்வி அலுவலர் ஆகியோரின் கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் ஜனவரி 8ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.