சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் அங்கன்வாடிகள் செய்யப்படாமல் இருந்துவந்தன. தற்போது தொற்றின் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில், பள்ளி, கல்லூரி, அங்கன்வாடிகள் இன்று முதல் செயல்பட அரசு அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் அங்கன்வாடியில் 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தில் சத்துணவை குழந்தைகள் வரிசையில் அமர்ந்து உணவருந்தினர்.
"அங்கன்வாடி குழந்தைகளுக்கு 11:30 முதல் 12.30க்குள் சத்துணவை வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க வேண்டும். அங்கன்வாடிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. காலாவதியான தரமற்ற பொருள்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது" என தமிழ்நாடு அரசு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.