மைனா, சாட்டை போன்ற தரமான படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்சின் தயாரிப்பில் ஆறாவது படைப்பாக "கா" திரைப்படம் வெளி வருகிறது. இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக முதன் முறையாக ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இதில் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த சலீம் கவுஸ் வனத்துறை அலுவலராக நடித்திருக்கிறார். இவர்களுடன் சின்னத்திரை புகழ் கமலேஷ், காற்றுக்கென்ன வேலி அக்ஷிதா, சூப்பர் டீலக்ஸ் நவீன், கும்கி மூணார் சுப்பிரமணியன் ஆகியோருடன் அர்ஜுன் சிங் என்கிற புதுமுக நடிகரும் நடித்துள்ளனர்.
![ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள ஆண்ட்ரியா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-kaa-andria-script-7205221_18032022120822_1803f_1647585502_534.jpg)
கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ளார். கத்தால கண்ணாலே பாடல் சுந்தர் சி பாபு இசையமைக்க, அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, எலிசா படத்தொகுப்பை செய்துள்ளார். மேலும் சேதுவின் சிறப்பு சப்தமும், தரணியின் மிரட்டல் ஒலி கலவையும் இப்படத்தின் சிறப்பம்சம்.
ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்று வந்த திகில் அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக ஏற்படும். இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் ஷாலோம் ஸ்டுடியோஸ் தங்களது ஏழாவது படைப்பாக ஸ்ரீகாந்த், தினேஷ் மாஸ்டர் நடிப்பில் "சம்பவம்" என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க: தாய்மையில் மிளிரும் காஜல் அகர்வால்