தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கவேலு என்பவர் அந்தமான் லட்சத் தீவு துறைமுகத்தில் துணை தலைமை பொறியாளராக பணியாற்றி ஒய்வுபெற்றவர்.
அவரது மனைவி கலைச்செல்வி என்பவரும் உதவிப் பொறியாளராக போர்ட் பிளேர் துறைமுகத்தில் 2016ஆம் ஆண்டு வரை பணி செய்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார்.
இந்நிலையில், மாணிக்க வேலு வருமானத்திற்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளதாக சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் அவரது வருமானம், சொத்து குறித்து சிபிஐ அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் அவர் வருமானத்திற்கும் அதிகமாக 169 விழுக்காடு சொத்து அதிகமாக சேர்த்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சொத்துகளை குவித்துள்ளார். அவற்றை மகள், மனைவி பெயரில் வைத்துள்ளார். மேலும் மகளின் மருத்துவப் படிப்பிற்காக தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் பெரும் தொகையை தன் மூலமாகவும் உறவினர்கள் மூலமாகவும் அளித்துள்ளார். இதனையடுத்து சிபிஐ ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாணிக்கவேலு மீது சொத்துகுவிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 100 கோடி மோசடி - வழக்குப் பதிவு செய்த சிபிஐ