சசிகலா பெங்களூருவிலிருந்து பிப்ரவரி 7ஆம் தேதி தமிழ்நாடு வர இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (பிப்.3) அறிவித்தார். அத்துடன், வழிநெடுக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வரவேற்பு கொடுப்பதற்கும் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதனிடையே, ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வார் என்பதால், அதனை அரசு மூடியிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் இதுகுறித்து அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் விமர்சித்து எழுதியுள்ளது. அதில், “சசிகலா வருகிறார் என்றதும் அம்மா சமாதியை மூடுபவர்கள், நாளை அதிமுக தலைமைக் கழகம் செல்லும் சேதி கிடைத்தால் தலைமையகத்தையே மூடிவிடுவார்களா...?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க...தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள் உடனுக்குடன்