ETV Bharat / city

அம்மா உணவகம் மூடல்? - நல்லரசை நிறுவ நினைக்கும் ஸ்டாலினுக்கு இது அழகல்ல... ஏழைகளை நினைங்க! - Amma Unavagam Debate in Tamil Nadu Assembly

அம்மா உணவகத்தை மூடினால் அனுபவிப்பீர்கள் எனச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Assembly
Tamil Nadu Assembly
author img

By

Published : Jan 6, 2022, 6:42 PM IST

Updated : Jan 7, 2022, 2:42 PM IST

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகப் பணியாட்கள் குறைக்கப்பட்டுள்ளனர். மேலும் உணவகத்திற்கு வழங்கப்படும் பொருள்களும் குறைவாக உள்ளது எனக் குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, அம்மா உணவகம் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இந்த மழை நேரத்தில்கூட இலவச உணவு அம்மா உணவகங்கள் மூலம் அளிக்கப்பட்டது என்றார்.

உடனே குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "அம்மா உணவகத்தை மூடினால் என்ன? கலைஞர் பெயர் உள்ள எத்தனை திட்டங்களை மூடியுள்ளீர்கள் நீங்கள்" என்றார். இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகத்தை மூடினால் அனுபவிப்பீர்கள் என்றார்.

உடனே குறுக்கிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "கலைஞர் பெயரில் உள்ள திட்டங்களை மூடியதால்தான் தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு இந்தத் தண்டனை கொடுத்துள்ளனர் (பேரவைத் தேர்தல் தோல்வி). நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிருக்கிறீர்கள்" என்றார்.

அம்மா உணவகத்தை வெறும் அரசியலாகப் பார்க்காமல் அதன்மூலம் பயனடையும் ஏழைகள், பாட்டாளிவர்க்கத்தையும் திமுக அரசு பார்க்க வேண்டும். மக்கள் சார்ந்த நல்ல திட்டங்களை எந்த அரசு முடக்கினாலும் அது தவறுதான். பழிவாங்கும் பேரில் இதுபோன்று செய்வதால் அவர்கள் எதிர்பார்க்கும் நல்லரசை கட்டியெழுப்புவது என்பது கனவாகத்தான் போகும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாப் பாதுகாப்பு குறைபாடு; குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

Last Updated : Jan 7, 2022, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.