ETV Bharat / city

வெடிக்கும் உட்கட்சி பூசல் : என்ன நடக்கிறது காங்கிரஸில்? - Congress contesting constituencies

கண்ணீர் சிந்தி, தன்மானம் பற்றி பேசி காங்கிரஸ் 25 சீட்கள் வாங்கிய நிலையில், தற்போது அந்த 25 சீட்களை பிரித்து வேட்பாளர்களை நியமிப்பதில் நீடிக்கும் உட்கட்சி பூசலால் திமுக கூட்டணியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

வெடிக்கும் உட்கட்சி பூசல் : என்ன நடக்கிறது காங்கிரஸில்?

author img

By

Published : Mar 14, 2021, 8:20 PM IST

காங்கிரஸில் உட்கட்சி பூசல் அடிக்கடி ஏற்படுவது வழக்கமான ஒன்று. குறிப்பாக மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் வலுவிழந்து வரும் நிலையில், அக்கட்சியினர் தேர்தல் நேரத்தில் காங்கிரஸிலிருந்து விலகி மாற்று கட்சியில் இணைவதும், வேட்பாளர் தேர்வில் கைகலப்பு முதல் வாக்குவாதம் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் 'கண்கள் என்றால் கண்ணீர் வரத்தான் செய்யும்' 'நமக்கு தன்மானம் முக்கியம்' என அப்படி இப்படி பேசி 25 சீட்களை பெற்றுள்ளது. ஒருவழியாக சீட் வாங்கிய காங்கிரஸ் ஏன் 25 கொடுத்தோம் என்று திமுக வருத்தப்படும் அளவில் தற்போது காங்கிரஸில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

வெடிக்கும் உட்கட்சி பூசல் : என்ன நடக்கிறது காங்கிரஸில்?

தற்போதைய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணிக்கு சீட் கொடுக்க கூடாது என்று ஒரு குழுவும், நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் தலைமையில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை எதிர்த்து ஒரு குழுவும், கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவாக ஒரு குழுவும் என மூன்று குழுவினர் தனித் தனியாக நேற்று சத்தியமூர்த்தி பவனில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

"உழைப்பவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை சீட் கொடுப்பது இல்லை; பணம், சிபாரிசு இருந்தால் சீட் என்ற நிலை உள்ளது" என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் விமர்சனங்களை ட்விட்டரில் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அடாவடி அரசியல் செய்யும் ஜோதிமணி மீது நடவடிக்கை தேவை என ஊடகப்பிரிவு தலைவர் கோபன்னா பதிலுக்கு ஒரு ட்வீட் பதிவு செய்ய திமுக கூட்டணியில் இது கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதே போல் புதுச்சேரி காங்கிரஸிலும் வேட்பாளர்கள் தேர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக காங்கிரஸ் போட்டியிட உள்ள 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். உட்கட்சி பிரச்னையை சரி செய்ததும், அதிருப்தியில் இருப்பவர்களுடன் பேசி விரைவில் அனைத்தையும் சரி செய்ய காங்கிரஸ் தேசிய தலைமை உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.

உட்கட்சி பூசல் காங்கிரஸில் என்றாலும் இது திமுக கூட்டணியை பலவீனம் படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் இதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் அடுத்த தேர்தலில் 25 சீட்கள் வாங்குவதும் கடினம் என்று கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.