ETV Bharat / city

அரசு அலுவலக கழிப்பறைகள் மாற்றுத்திறனாளிகளுக்குமானதா? - மாற்றுத்திறனாளிகள்

சென்னை: அரசு அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர் வசதிகள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

high court
high court
author img

By

Published : Feb 8, 2021, 4:02 PM IST

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை அலுவலகத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளி ஊழியர் சரண்யா, இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வை மேற்கோள்காட்டி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வகை செய்யும் சட்டம் 1995 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட போதும், கடந்த 25 ஆண்டுகளாக காகித அளவிலேயே இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சரண்யாவுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை என மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதனால் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும், வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும், அனைத்து மாவட்ட அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதுதவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிப்பறை, குடிநீர் வசதிகள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

இதையும் படிங்க: ஆடு, மாடு, கோழிகளை துன்புறுத்தாமல் கொண்டு செல்ல அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.