ETV Bharat / city

முதலமைச்சருக்காக காக்க வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்; நடந்தது என்ன? - எடப்பாடி பழனிசாமி

சென்னை: முதலமைச்சரின் கான்வாய் கடந்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

convoy
convoy
author img

By

Published : Apr 27, 2020, 4:49 PM IST

சென்னையில் வழக்கமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்து செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படும். பாதுகாப்பு வாகனங்களுடன் முதலமைச்சர் அந்தப் பகுதியை கடந்து சென்ற பிறகே பொதுமக்கள் மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இதனால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் வெகுநேரம் வெயிலில் காத்திருக்கும் காட்சியை இயல்பாகக் காண முடியும்.

முதலமைச்சருக்காக காக்க வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்! புதிய சர்ச்சை!

தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே, தலைநகர் சென்னையிலும் கடுமையானக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மிகவும் அத்தியாவசியத் தேவை உள்ளவர்கள், மருத்துவமனை செல்பவர்கள்தான் சாலைகளில் பயணித்து வருகின்றனர். இதனால் சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி உடனான காணொலிக் காட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டார். அப்போது சாலையில் அவர் செல்லும் வழியில் வழக்கம்போல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், தீவுத்திடல் அருகே ஏராளமான வாகனங்கள் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்லும் வரை காத்திருந்தன. இதில் மற்ற வாகனங்களுடன் ஆம்புலன்ஸ் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் அடையாறு திருவிக பாலத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து முடக்கம் காரணமாக சாலைகள் காலியாக உள்ள நிலையில், உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஆம்புலன்ஸ் வாகனம், முதலமைச்சருக்காக காக்க வைக்கப்பட்டதும், கரோனா வைரஸ் காரணமாக அவசரப் பணிகளுக்கு செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் பகல் கொள்ளை - வெள்ளை அறிக்கை கேட்கும் டிடிவி தினகரன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.