சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(29). அவர் தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர், நேற்று நள்ளிரவு பணியை முடித்துவிட்டு வண்டலூரிலிருந்து வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
அப்போது ஓட்டேரி காவல் நிலையம் அருகில் அவர் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்குவிரைந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். தற்போது லாரி ஓட்டுநர் திராவிடர் செல்வம்(40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இரு சக்கர வாகன விபத்து- சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிப்பு!