சென்னை: அமைந்தகரை புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நேற்றிரவு(ஜன.30) காவலர்கள் பிரேமா, சரவணன், சிவராமன், கோவிந்தன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டிபி சத்திரத்தை சேர்ந்த பாபு என்பவர் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அந்த வழியாக அதி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது.
இதனை பார்த்த காவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று பாபுவை மீட்டனர். ஆனால் பாபு பேச்சு மூச்சு இல்லாமல் மயக்க நிலையில் இருந்ததால் காவலர் ஒருவர் பாபுவின் மார்பில் கையை வைத்து அமுக்கி முதலுதவி அளித்து பாபுவை முழிக்க வைத்துள்ளார்.
இதையடுத்து அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப்பின் பாபு தற்போது வீட்டில் நலமுடன் உள்ளார்.
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற இருசக்கர வாகன ஓட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இயக்குநர் பாரதிராஜாவிற்கு கரோனா தொற்று உறுதி