முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய, நடிகையும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாஜக பொறுப்பாளருமான குஷ்பூ, ” சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக தலைமை என்னை நியமித்துள்ளது. கூட்டணி, தொகுதிகள் பற்றி தலைமை தான் முடிவு செய்யும்.
தமிழகம் முழுவதும் பாஜக வலுப்பெற்று வருகின்றது. எதிர்க்கட்சிகளின் பொய் பரப்புரைகளை முறியடித்து, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வோம். தேர்தலில் நான் போட்டியா, இல்லையா என தலைமை தான் அறிவிக்கும்.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மக்கள் பணிக்கு வரலாம். தேர்தல் முடிவில் தான் அவர்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறதா என்பது தெரியும். கமல் எனது நல்ல நண்பர். என்னை அடிக்கவும், அணைக்கவும், திட்டவும் அவருக்கு உரிமை உண்டு.
என்னுடைய அரசியல் ஆசான் கருணாநிதி மட்டும் தான். ஆனால் கலைஞர் காலத்தில் இருந்த திமுக தற்போது இல்லை. அவரைப்போல நல்ல தலைவரும் இப்போது இல்லை ” என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்த மோடிக்கு ஸ்டாலின் டிப்ஸ்!