ETV Bharat / city

மதுக்கடைகளை திறந்த அரசு, வழிபாட்டு இடங்களை திறக்கக்கூடாதா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - தமிழ்நாடு செய்திகள்

சென்னை: தகுந்த இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : May 9, 2020, 12:35 PM IST

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மார்ச் 23ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு மே 17ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே நான்காம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறு,குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை, 33 முதல் 50% ஊழியர்களுடனும் சில கட்டுப்பாடுகளுடனும் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டு இடங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலில் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை இல்லாத மதுபானக் கடைகளை திறக்க அனுமதித்த அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கக் கூடிய, வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் நிதி நிலைமை பாதிக்கப்படுகிறது என்று சில நிறுவனங்களை இயக்க அனுமதித்த தமிழ்நாடு அரசு, மனதளவில் பாதிக்கப்பட்டு, நிம்மதி இழந்திருக்கும் தன்னை போன்றவர்களுக்கு மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல அனுமதித்தால், அது ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு காலத்தில், பள்ளிவாசலுக்கு சென்று வர முடியவில்லை என்றும், முன்னோர் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை அந்தந்த இடங்களுக்கு சென்று நிறைவேற்ற முடியாத மன அழுத்தத்தில் பலரும் இருப்பதாகவும் மனுவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் மே 11 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் 796 பேர் தனிமைப்படுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.