ETV Bharat / city

'ஸ்டாலினுக்கு நன்றி!' - ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பு - Tamil news

செய்தி ஊடகங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நேற்று (ஜூன் 27) நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.

Alliance For Media Freedom
Alliance For Media Freedom
author img

By

Published : Jun 28, 2021, 6:45 AM IST

சென்னை: கடந்த ஆட்சியின்போது செய்தி ஊடகங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இது குறித்து ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பினர் நேற்று (ஜூன் 27) முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிலையில்,

  • ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின் தலைவர் என். ராம்,
  • நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால்,
  • மூத்தப் பத்திரிகையாளர் ஆர். பகவான் சிங்,
  • பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (NWMI) சார்பில் அமைப்பாளர் பீர் முகமது,
  • இந்துஜா ரகுநாதன்,
  • லட்சுமி சுப்பிரமணியன்

ஆகியோர் நேரில் சென்று முகாம் அலுவலகத்திலிருந்த முதலமைச்சரிடம் நன்றி தெரிவித்தனர்.

செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு

பின்னர், ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும், ஊடகத்தினரின் நலன் பேணப்படும் என்றும் நன்றி தெரிவித்தவர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: மனித - விலங்கு மோதலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.