சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் செப்.1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதல்கட்டமாத 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்தாண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஒமைக்ரான் தொற்று தமிழ்நாட்டில் வேகமாக பரவிவருகிறது. அதன்படி ஒமைக்ரான் தொற்று பாதிப்பில் இந்தியா அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனிடையே நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரையும் ஆல் பாஸ் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 1,431 பேருக்கு ஒமைக்ரான்; தமிழ்நாடு மூன்றாவது இடம்