நாடு முழுவதும் இரண்டாம் அலை கரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி, தாம்பரம் நகராட்சியில் முன்கள பணியாளர்களாக உள்ள போக்குவரத்து துறையினர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் ஓட்டுநர், நடத்துநர், பல்வேறு போக்குவரத்து பணியாளர்கள் என 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், அவர்களை முறையாக கண்காணித்த மருத்துவக் குழுவினர் அடுத்தக்கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தேதிகளை குறிப்பிட்டு வழங்கினார்கள்.
இதனால், நேரடியாக பொதுமக்களிடம் தொடர்புடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால், கரோனா தொற்று பரவல் தடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'தடுப்பூசி சப்ளையில் மக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு'