ETV Bharat / city

‘கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத வரை போராட்டங்கள் தொடரும்’ - வெங்கடாசலம்

author img

By

Published : Jan 31, 2020, 1:05 PM IST

சென்னை: கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத வரை போரட்டங்கள் தொடரும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “வங்கித் துறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் முடிந்த நிலையில், நவம்பர் மாதம் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு கோரிக்கைகளுக்காக 30 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதிகரித்து வரும் விலைவாசி, வேலை பளுவுக்கு தகுந்தவாறு ஊதியத்தை உயர்த்த கோரிக்கை வைத்தும் 12 விழுக்காடு மட்டுமே உயர்த்தப்படும் என்றனர். இதனால் போராட்டத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 27ஆம் தேதி டெல்லியில் தொழிலாளர் ஆணையர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவு எடுக்கச் சொன்னார். ஆனால் அதிலும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. மும்பையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 15 விழுக்காடு வரை உயர்த்துவதாக கூறப்பட்டது. ஆனால், 20 விழுக்காடு வழங்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. அரசு அலுவலர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை என்பது போல் வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

சென்னையில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பேட்டி

மேலும் பேசிய அவர், “வங்கி ஊழியர்களின் சலுகைகள், பென்ஷன் போன்ற பிரச்னைகளிலும் நிர்வாகம் பிடிவாதமாக இருப்பதால் திட்டமிட்டபடி 31ஆம் தேதி, பிப்ரவரி 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களும் இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் வங்கி கிளைகள் முடங்கக் கூடிய நிலைமை ஏற்படும். இதற்கு அரசும் வங்கி நிர்வாகமும்தான் பொறுப்பு. நிர்வாகம் கோரிக்கையை ஏற்றால் போராட்டத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறோம். இரண்டு நாள் போராட்டத்திற்கு பின்பும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மார்ச் மாதம் 11, 12, 13 ஆகிய மூன்று நாள்கள் போராட்டம் நடத்தப்படும். அதிலும் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீடு, கடைகளில் போலீசார் திடீர் சோதனை

Intro:சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் பேட்டி

வங்கி துறையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். கோரிக்கைகளை தந்து 30 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முடிவும் ஏற்படவில்லை. விலைவாசி உயர்ந்துள்ளது. வேலை பளு அதிகமாக உள்ளது. அதற்கு தகுந்தவாறு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரினோம். ஆனால் 12 சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும் என்றனர்.

இதனால் போராட்டத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 27ந் தேதி டெல்லியில் தொழிலாளர் ஆணையர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவு எடுக்க சொன்னார். ஆனால் அதிலும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. மும்பையில் நிர்வாகம் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 15 சதவீதம் வரை உயர்த்துவதாக கூறியது. 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. அரசு அலுவலர்களுக்கு 2 நாள் விடுமுறை என்பது போல் வாரத்தில் சனி, ஞாயிறு 2 தினங்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். வங்கி ஊழியர்களின் சலுகைகள், பென்ஷன் போன்ற பிரச்சனைகளிலும் நிர்வாகம் பிடிவாதமாக இருப்பதால் திட்டமிட்டபடி 31ந் தேதி, பிப்ரவரி 1ந் தேதி ஆகிய 2 தினம் இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளோம். 2 நாட்கள் வங்கி சேவைகள் இயல்பாக இருக்காது. வங்கி கிளைகள் முடங்க கூடிய நிலைமை ஏற்படும். இதற்கு அரசும் வங்கி நிர்வாகம் தான் பொறுப்பு. வேலை நிறுத்தம் அறிவித்தும் இறுதி நாளில் அழைத்து பேசியும் கோரிக்கைகள் ஏற்கபடவில்லை.

மக்கள் புரிந்து கொண்டு நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தர வேண்டும். நிர்வாகம் கோரிக்கையை ஏற்றால் போராட்டத்தை கைவிட தயாராக இருக்கிறோம்.

2 நாள் போராட்டத்திற்கு பின் நிர்வாகம் வரவில்லை என்றால் மார்ச் மாதம் 11, 12,13 ஆகிய 3 நாள் போராட்டம் நடத்தப்படும். அதிலும் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஏப்ரல் 1ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என அறிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.