ETV Bharat / city

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்; அரசு உத்தரவுக்குத் தடை கோரி வழக்கு!

ஆகம விதிகள்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கவும், தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jul 29, 2021, 4:09 PM IST

Updated : Jul 29, 2021, 4:14 PM IST

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்துவிட்டு, வாதங்களை முன்வைக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

சென்னை சி.ஐ.டி. நகரைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், 'குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டுமென ஆகம விதிகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்துவிட்டால், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும்

அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்று பேட்டியில் தெரிவித்திருந்தார். இவ்வாறு அமைச்சர் அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு முரணானது.

குறிப்பிட்ட சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழில் அர்ச்சனை செய்வதும், குறிப்பிட்ட பிரிவினரை தவிர மற்றவர்கள் கருவறைக்குள் செல்வதும் ஆகம விதிகளுக்கு முரணானது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இவற்றில் 500 கோவில்களில் மட்டுமே ஆகம விதிகள் பின்பற்றப்படுவதாகவும், அங்குள்ள நியமனங்களில் ஆகம விதிகளை பின்பற்ற வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த 500 கோயில்கள் தவிர, 43,500 கோவில்களில் தமிழ்நாடு அரசின் திட்டப்படி அறிவிப்பு எப்படி அனைவரையும் அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம்.

எனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக்கூடாது. ஆகம விதிகளைப் பின்பற்றி குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரியிருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆஜராகி, சிவாச்சாரியார்கள் வழக்கில் ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே இந்த தீர்ப்புக்கு முரணாக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், தொடக்க நிலையிலேயே ஸ்ரீதரன் என்பவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்துவிட்டு, வாதங்களை முன்வைக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிக்கலாமே: மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய தடை விதிக்க கோரி வழக்கு - உயர் நீதிமன்றம் மறுப்பு

Last Updated : Jul 29, 2021, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.