ETV Bharat / city

’ட்ரம்பின் வருகை இந்தியப் பொருளாதாரத்திற்கான அச்சுறுத்தல்’ - ட்ரம்ப் வருகை

சென்னை: இந்திய வளங்களைப் பறிக்கும் நோக்கத்தோடு இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபரை புறக்கணிப்போம் என அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

protest
protest
author img

By

Published : Feb 24, 2020, 2:52 PM IST

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சார்பில் சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், ”அமெரிக்காவின் கொள்கைகள் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எதிரானதாகும். அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய நலன்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளன. ட்ரம்பின் வருகையால் நம் பொருளாதாரத்திற்கும், சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படவுள்ளது. இந்திய வேளாண் பொருட்களை இங்கே விற்பனை செய்து வருகிறோம். ஆனால் அமெரிக்க சந்தையை இங்கே இறக்கி நம் வாழ்வாதாரத்தை நசுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

உயிர் காக்கும் மருந்துகள் மேலை நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில் இங்கே ஜெனடிக் மருந்துகள் என குறைவாகக் கிடைக்கிறது. இவற்றையும் காப்புரிமையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அமெரிக்க அதிபர் வருகையின் நோக்கமாக உள்ளது. அமேசான் உள்ளிட்ட பல இ காமர்ஸ் நிறுவனங்களை இங்கே ஆழமான அடித்தளமிடும் முயற்சியே இந்த சந்திப்பு.

அமெரிக்கா அனைத்து நாடுகளின் மீதும் ஏதேனும் ஒரு வகையான தாக்குதலை நடத்தி வருகிறது

இந்தியாவிலிருந்து மூன்றாயிரம் பொருட்களை அமெரிக்காவிற்கு எந்தவித வரிகளும் இல்லாமல் ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படி அமெரிக்க அதிபர் வருகையை நாம் வரவேற்க முடியும். ராணுவத் தளவாடங்கள் அனைத்தையும் அமெரிக்காவிடம் இருந்து வாங்க நிர்பந்திக்கிறார்கள். அமெரிக்கா அனைத்து நாடுகளின் மீதும் ஏதேனும் ஒரு வகையான தாக்குதலை நடத்தி வருகிறது” என்றார்.

இதையும் படிங்க: ‘அருமையான வரவேற்புக்கு நன்றி’ - மோடியை பாராட்டிய ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.