சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டிருந்த நிலையில், ஆறு தொகுதிகள் ஒதுக்குவதற்கான உறுதியை அதிமுக அளித்துள்ளது.
தமாகா குழுவும், அதிமுக குழுவும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் நானும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். நாங்கள் கேட்கும் தொகுதிகளை அதிமுக ஒதுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சைக்கிள் சின்னத்திற்காக கடைசி வரை போராட்டம் தொடரும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'பாமக'விற்கு பூந்தமல்லி தொகுதி: அதிமுக தொண்டர்கள் போராட்டம்