ETV Bharat / city

'என் அறிவுரையை ஏற்று மு.க. ஸ்டாலின் ஆய்வு நடத்தியது மகிழ்ச்சி'- ஜெயகுமார்

என்னுடைய அறிவுரையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Former Minister Jayakumar
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
author img

By

Published : Jan 9, 2022, 6:39 AM IST

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணைக்கு சென்றவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இதனை நீதிமன்றமே கண்டித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக என்பதால் திமுக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 550 கொலைகள் நடந்துள்ளன. மேலும் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து செங்கல்பட்டில் இரட்டை கொலை, அடையாறில் பறக்கும் ரயிலில் துப்பாக்கி முனையில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

குறிப்பாக பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் பாதி பொருள்கள் இல்லை என்பதால் மக்கள் திமுகவை திட்டி தீர்க்கின்றனர். இதனை அறிந்துகொள்ள அரசாட்சி காலத்தில் அரசர் நகர் வலம் செல்வதுபோல சென்றால் மக்களின் மனநிலையையும், திட்டத்தின் பயன்பாட்டையும் தெரிந்து கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். என்னுடைய அறிவுரையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வது மகிழ்ச்சியளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் தரத்தை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.