ETV Bharat / city

’தலித்களை புறக்கணிக்கும் அதிமுக அரசுக்கு தக்க பாடம்’ - சாதிவாரி கணக்கெடுப்பு

சென்னை: இழைக்கப்படும் அநீதிகளுக்கும், காட்டப்படும் ஓரவஞ்சனைக்கும் தலித் மக்கள் தேர்தலின்போது அதிமுகவுக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

chief
chief
author img

By

Published : Dec 2, 2020, 3:48 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அதிமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி கொஞ்சநஞ்சமல்ல. தொடர்ந்து தலித் மக்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்தி வரும் முதலமைச்சர், திடீரென நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அவரது ஓரவஞ்சனை போக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

சாதியின் பெயரால் எவ்வளவு மோசமான வன்முறைகைளை கட்டவிழ்த்து விட்டாலும் அதற்கு ஒருபோதும் பணியமாட்டோம் என சாதி சங்கங்களை புறந்தள்ளிய தலைவர் எம்ஜிஆர். அதேபோல, ஜெயலலிதாவும் சாதியவாத சக்திகளுக்கு அஞ்சாமல், ஒரு கட்சியை வெளிப்படையாக சாதிக் கட்சி, வன்முறைக் கட்சி என்றும், அவர்கள் ஏற்படுத்திய சேதங்களுக்காக ரூ.73 கோடியை அரசுக்குச் செலுத்த வேண்டுமென்றும் சட்டப்பேரவையிலேயே பேசினார்.

இத்தகையோரின் வாரிசுகளாக கூறிக்கொள்ளும் இன்றைய ஆட்சி நடத்துவோர், அரசியல் ஆதாயத்துக்காக அஞ்சிப் பணிந்து அறிவிப்புகளை வெளியிடுவது அத்தலைவர்களுக்கு களங்கம், இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கைகளேயாகும்.

அனைத்து சமூகங்களையும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு உட்படுத்துவதில் விசிகவுக்கு மாறுபாடு ஏதுமில்லை. ஆனால், சமூகநீதி அடிப்படையில் தான் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக, கூட்டணி பேரத்துக்காக இந்த நாடகம் நடத்தப்படுகிறதா? அத்துடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா?

சமூகநீதிக்காகத் தான் இது மேற்கொள்ளப்படுகிறது எனில், ஆதிதிராவிட மக்களின் கோரிக்கைகள் எதுவும் சமூகநீதி என்பதற்குள் வராதா? அல்லது, சாதிய வாக்குகளுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஆட்சியாளர்கள் ஒப்புக் கொள்வார்களானால், தலித் மக்களின் வாக்குகளை அதிமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா? அல்லது தலித் மக்களுக்கு வாக்குரிமையே இல்லையா?

தங்களுக்கு முஸ்லிம் வாக்குகள் தேவையே இல்லை என்று பாஜக, வெளிப்படையாக செயல்படுவது போல, ஆதிதிராவிட மக்களின் வாக்குகள் தேவையில்லை என அதிமுக முடிவெடுத்து விட்டதா? அதிமுக அரசின் இந்த ஓரவஞ்சனைப் போக்கு; தலித் மக்களைப் புறக்கணிக்கும் போக்கு; சாதியவாத அரசியலுக்குப் பணியும் போக்குத் தொடருமேயானால், உரியநேரத்தில் தலித் மக்கள் அதிமுகவுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'இது தேர்தல் பிரச்சனை அல்ல' - கூட்டணி குறித்து பாமக மழுப்பல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.