சென்னை: வானகரத்தில் நாளைய தினம் (ஜுன் 23) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொது குழுவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுக்குழு நடக்கக் கூடிய இடத்தில் முன்பாக 100 மீட்டர் தொலைவிலேயே இரும்பு தகடுகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. வழிநெடுகிலும் கட்டவுட் பேனர்கள் வைக்கும் பணி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பொதுக்குழு நடக்கக்கூடிய இடத்திற்கு முன் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுக்குழு நடக்கக்கூடிய இடத்திற்கு முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பேருந்துகளை வெளியே விடாமல் பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்