அதிமுகவின் உள்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றித் தேர்வானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளில் போட்டியிடுவோர் பொதுக்குழு உறுப்பினர்களால் இல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுகவின் தேர்தல் ஆணையர்களாக அமைப்புச் செயலாளர் பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாட்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கடந்த இரண்டு நாள்கள் மனு பெறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மனு பரிசீலனை நடந்தது, இன்று வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இருவர் மட்டுமே மனு தாக்கல்செய்த காரணத்தினால் அவர்கள் போட்டியின்றித் தேர்வானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் இந்துக்கள் விரைவில் சிறுபான்மையினராக மாறுவர் - தொகாடியா கவலை