சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2021-2022ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பதை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக முன்மொழிந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு கேள்விக்கு பதில்
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட பின் அதற்கு பதிலளித்து பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்குகளில் மாவுப்பூச்சி தாக்குதல் கடந்த ஆண்டு தொடங்கியது. அப்போதே தடுத்திருந்தால் பெரியளவில் சேதம் ஏற்பட்டிருக்காது.
மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம், விஞ்ஞானிகள் வழங்கியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவுப்பூச்சி தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுமா? என்ற எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு அமைச்சர் பதில் தரவில்லை.
இதையும் படிங்க: 'திமுக அரசே மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்து!'