கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 44 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதற்கு பிறகு, 50 சதவிகித பயணிகளுடன் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே அனுமதி வழங்கப்படும்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு முகக் கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
பயணிகளிடையே இருக்கையில் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்.
முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி.
வரிசையில் நின்று பேருந்தில் ஏற வேண்டும்.
’கூகுள் பே’ போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விவசாயி, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் அறிவிப்பு