இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தியில், “இறைவனின் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பதே வாழ்வின் மகத்தான நெறி என்பதை உணர்த்தும் ’பக்ரீத்’ என்னும் தியாகத் திருநாளில், அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் .
இறைத்தூதர் இப்ராகிம் தனது அன்பு மகன் இஸ்மாயிலை, இறைவன் தனக்கு கட்டளையிட்டவாறு பலியிடத் துணிந்ததையும், இறை வார்த்தைக்கும், தனது தந்தையின் ஆணைக்கும் பணிந்து, பலியாக சம்மதித்த இஸ்மாயிலின் பணிவையும், இந்த நாளில் நாம் நினைவில் கொள்ளும்போது, நம்மையே நாம் தூய்மையாக்கிக்கொள்கிறோம்.
அப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய இத்திருநாளில் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் அன்பும், அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டுகிறோம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பக்ரீத் திருநாள் - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!