சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில், மாணவிகளுக்கு அரசு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் பாண்டியராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ” அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அடுத்த ஆட்சியும் அமையும்.
கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அதிமுகவிற்கு தனித்து ஆட்சி அமைக்கும் வல்லமையும், மக்கள் செல்வாக்கும் உள்ளது. எனவே தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைப்போம்.
திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களில், திமுக தலைவர்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர். அவர்களின் நாடகம் மக்களிடத்தில் எடுபடவில்லை “ என்றார்.
இதையும் படிங்க: திமுக சுவரொட்டியில் அதிமுக கொடி - வேகமாகப் பரவிய படம்