ETV Bharat / city

அதிமுக செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது! - ஊடகம்

சென்னை: ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என அதிமுக செய்தித் தொடர்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைமை விதித்திருந்த தடை நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக
author img

By

Published : Jun 30, 2019, 7:53 AM IST

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தை பெற்று தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் "எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கட்சியில் வெவ்வேறு கருத்துகளை உடையவர்களாக இருப்பதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரை முடிவெடுக்க முடியவில்லை" என்று அதிமுக மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்! என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அதன்பின் அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை ஊடகங்களில் பேசக்கூடாது, ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட்டு அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் மீண்டும் வழக்கம்போல் ஊடங்களுக்குப் பேட்டி உள்ளிட்டவை அளிக்கலாம் என்று அந்த தடையை நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

Intro:Body:அதிமுகவினருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடக விவாதங்களில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிமுக உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து அதிமுக மதுரை வடக்கு மாவட்ட செய்ய;லாளர் ராஜன் செல்லப்பா கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும், இருவர் இருப்பதால் முடிவெடுக்க முடியவில்லை என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த ஜூன் 12ம் தேதி சென்னையில் நடந்தது. இதன் பிறகு அதிமுக செய்தி தொடர்பாளர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரை ஊடகங்களில் பேசக்கூடாது, ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது என்று உத்தரவிட்டு அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் வழக்கம் போல தங்கள் பணிகளில் ஈடுபடலாம் என்று அந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.