ETV Bharat / city

தேர்தல் வியூகம்: இன்று கூடுகிறது அதிமுக ஆலோசனைக் கூட்டம்! - Co-coordinator Palanisamy

சென்னை: சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021 விரைவில் வரவுள்ள நிலையில், இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

ADMK meeting Today
ADMK meeting Today
author img

By

Published : Dec 14, 2020, 9:36 AM IST

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 14ஆம் தேதி (இன்று) மாலை 4:30 மணிக்கு தலைமைக் கழகத்தில் நடைபெற உள்ளது.

நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கடந்த நவ. 20ஆம் தேதி அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி, அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இக்கூட்டத்தில் ரஜினியின் அரசியல் நுழைவு, கூட்டணி, அதிக தொகுதிகள் கேட்கும் பாஜக உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில், தேர்தல் பரப்புரை வியூகம் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.