ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல், இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுமென மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.
அதிமுக சார்பில் நாளை மாலை 5 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடக்கவுள்ளது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள், அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் எவ்வாறு செயல்படுவது, என்னென்ன வழிமுறைகளைக் கையாள்வது உள்ளிட்டவை குறித்து, இதில் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம்