ETV Bharat / city

ராஜ்ய சபா தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்! - ADMK candidates file nomination for rajyasabha election

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

ராஜ்ய சபா தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

author img

By

Published : Mar 12, 2020, 2:54 PM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் விரைவில் காலியாகவுள்ள ஆறு ராஜ்ய சபா இடங்களுக்கு மார்ச் 26ஆம் தேதி மாநிலங்களைவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்ய சபா தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
வேட்பு மனுத் தாக்கல் செய்த அந்தியூர் செல்வராஜ்.

இந்நிலையில், திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் கேபி முனுசாமி, தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று மார்ச் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கேபி முனுசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்த போது...

இவர்கள் மூவரும் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க; முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.