ETV Bharat / city

நான்கு தொகுதி இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? - ஓபிஎஸ்

சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

admk
author img

By

Published : Apr 22, 2019, 11:18 AM IST

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதனையடுத்து திமுக தனது வேட்பாளர்களை முதலில் அறிவித்தது. அதேபோல், தினகரனின் அமமுகவும் இன்று தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இதற்கிடையே நான்கு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். எனவே அக்கட்சி எப்போது தனது வேட்பாளர்களை அறிவிக்கும் என்ற கேள்வி பலரிடம் எழுந்திருந்தது.

இந்நிலையில், நான்கு தொகுதிகளில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக தலைமை இன்று அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

4 தொகுதி இடைத்தேர்தல் 

அமமுக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,நான்கு  சட்டமன்றத் தொகுதி

இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

வருகின்ற மே மாதம் 19ஆம் தேதி அன்றுதமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல்.

116. சூலூர்

திரு K.சுகுமார் Ex.MP

கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர்

134. அரவக்குறிச்சி

திரு.P.H.சாகுல் ஹமீது

கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை தலைவர்

195. திருப்பரங்குன்றம்

திரு.I.மகேந்திரன் Ex.MLA

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்

217. ஓட்டப்பிடாரம் (தனி)

திரு.R.சுந்தரராஜ் Ex.MLA

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர்

கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர்   

ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார். 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.