ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு ஒத்திவைப்பு - AIADMK former minister

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 12, 2022, 9:47 PM IST

சென்னை: கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு விதித்திருந்த நிலையில், மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் தவே, இந்த வழக்கில்
ஏற்கனவே ஆரம்பகட்ட விசாரணைக்கு காவல்துறை அதிகாரி பொன்னியை சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தது. அதன் ஆரம்பகட்ட விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லை என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் சுட்டிக்காட்டினார். முதலில் ரிட் வழக்கை விசாரித்துவிட்டு. கிரிமினல் ஓபி வழக்கை விசாரிக்க வேண்டும். கிரிமினல் ஓபி வழக்கில் தான் ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் நாளை (அக்.13) ஒத்திவைப்பதாகவும், நாளை வழக்கை நடத்துங்கள் என்று தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் ஒப்புதலுடன்தான் இன்று விசாரனை ஒத்திவைப்பட்டது.

தற்போது, மேலும் தள்ளிவைக்க கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதென்று, விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதி ஒத்திவைத்தனர். ஏற்கனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: யுவனுக்காக ஒரு உலக சாதனை - அசத்திய மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.