இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊதியமானது சாதாரணப்பணி/சிறப்புப்பணி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர்களது ஊதியத் தொகையானது சாதாரணப்பணிக்கு (4 மணி நேரத்திற்குள்) ரூ.280 என்றும், சிறப்புப்பணிக்கு (4-8 மணி நேரம்) ரூ.560 என்றும் மறுவரையறை செய்யப்பட்டு உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், ஒரு யூனிட்டில் பணி செய்யும் ஊர்க்காவல் படையினர் எவ்வாறு தங்களது ஊதியத் தொகையை கோர வேண்டும் என்ற வழிமுறைகளும் அதில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் கோரும் தொகையானது வேறு ஏதேனும் கணக்கு/பட்ஜெட் ஒதுக்கீட்டின் கீழ் கோரப்படவில்லை என்று குறிப்பிடும் சான்றிதழ், அலகு முன்மொழிவுடன் சேர்க்கப்பட வேண்டும் எனவும், தோல்வியுற்றால் அது உடனடியாக நிராகரிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணியில் தொடர்ந்து இருப்போம் - முதுகலை மருத்துவ மாணவர்கள்