சென்னை: பொறியியல் படிப்பில் சேருவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 96 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் கூடுதலாக கடந்த ஆண்டுகளை விட 14 ஆயிரத்து 96 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 24ஆம் தேதிவரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
இதனையடுத்து நேற்றுவரை (ஆகஸ்ட் 24) பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவுசெய்தனர். இன்று (ஆகஸ்ட் 25) பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் (சமவாய்ப்பு எண்) வெளியிடப்படுகிறது.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு,
- 2019ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்களும்,
- 2020ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்களும் விண்ணப்பம் செய்திருந்தனர்.
- நடப்புக் கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கலந்தாய்வு விவரம்
மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் இன்று வெளியிடப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.
- சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதிமுதல் செப்டம்பர் 11ஆம் தேதிவரையிலும்,
- பொதுப்பிரிவுக் கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதிமுதல் அக்டோபர் 4ஆம் தேதிவரையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் அந்தப் பள்ளி திறக்கப்படாது'