ETV Bharat / city

சென்னைக்கு நடமாடும் கூடுதல் ஆம்புலன்ஸ்! - ஆம்புலன்ஸ்

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் அவசர ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ambulance
ambulance
author img

By

Published : Jun 12, 2020, 7:09 PM IST

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை உள்ளிட்ட வசதிகளும் மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நோயாளிகள் ஆம்புலன்ஸ் எனப்படும் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனையிலிருந்து தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கனவே வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நோயாளிகள் அதிகரிப்பால் அவசர ஊர்திகளின் தேவையும் அதிகரித்துள்ளது.

மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 150க்கும் மேற்பட்ட நடமாடும் அவசர ஊர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேவை கருதி மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அவசர ஊர்திகள், சென்னையில் இயக்குவதற்காக வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த அவசர ஊர்திகள் மூலம் நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து, தேவையான சிகிச்சை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 1,982 பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.