சென்னை: தியாகராயநகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி தனது நட்பை வெளிப்படுத்தும் வகையில், சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருந்த நட்பினையும் அன்பினையும் விஜயசாந்தி நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக்கூறப்பட்டாலும், அரசியல் அரங்கில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் குதிரையில் அமர்ந்து நூதன முறையில் வேட்பு மனுத்தாக்கல்!